எழுத்தியல்

பெயர்
எழுத்தின் பெயர்

 
66அ இ உம்முதற் றனிவரிற் சுட்டே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
அஇஉ - அ, இ, உ, என்னும் மூன்றும் , முதல் தனிவரின் சுட்டு - மொழிக்கு முதலிலே தனித்துச் சுட்டுப் பொருளைக் காட்டவரின் சுட்டு எழுத்தாம் .

முதல் எனப் பொதுப்படச் சொன்னதினாலே , புறத்தும் அகத்தும் வரும் எனக் கொள்க .

அக் கொற்றன் , இக் கொற்றன் , உக்கொற்றன் புறத்து வந்தன .

அவன் , இவன் , உவன் - அகத்து வந்தன .

அகரம் தூரத்தில் உள்ள பொருளையும் , இகரம் சமீபத்தில் உள்ள பொருளையும் , உகரம் நடுவில் உள்ள பொருளையும் சுட்டுதற்கு வரும் .