|
| எழுத்தியல் பிறப்பு முதல் எழுத்துக்களுக்கு இடப்பிறப்பு | | 75 | அவ்வழி, ஆவி யிடைமை யிடமிட றாகும் மேவு மென்மைமூக் குரம்பெறும் வன்மை. | | ஆறுமுகநாவலர் காண்டிகையுரை | | அவ்வழி - முன் சொன்ன வழியால் பிறக்கும் இடத்து. ஆவி இடைமை இடம் மிடறு ஆகும் - உயிரெழுத்துக்களுக்கும் இடையினத்திற்கும் இடம் கழுத்தாகும் , மென்மை மூக்கு மேவும் - மெல்லினம் நாசியை இடமாகப் பொருந்தும் , வன்மை உரம் பெறும் - வல்லினம் மார்பை இடமாகப் பெறும் .
|
|