எழுத்தியல்

பிறப்பு
முதல் எழுத்துக்களுக்கு முயற்சிப் பிறப்பு

 
76அவற்றுள்,
முயற்சியுள் அ ஆ வங்காப் புடைய.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
அவற்றுள் - மேலிடம் வகுக்கப்பட்ட முதல் எழுத்துக்களுள் , அ ஆ முயற்சியுள் அங்காப்பு உடைய -அ , ஆ இரண்டும் நால்வகை முயற்சியுள் அண்ணத்தின் தொழிலாகிய அங்காத்தலை உடையனவாய்ப் பிறக்கும் .

அங்காத்தல் - வாயைத் திறத்தல் .