|
| எழுத்தியல் பிறப்பு முதல் எழுத்துக்களுக்கு முயற்சிப் பிறப்பு | | 84 | அண்பன் முதலு மண்ணமு முறையின் நாவிளிம்பு வீங்கி யொற்றவும் வருடவும் லகார ளகாரமா யிரண்டும் பிறக்கும். | | ஆறுமுகநாவலர் காண்டிகையுரை | | அண்பல் முதல் நா விளிம்பு வீங்கி ஒற்ற , லகாரம் ( ஆய் ) - மேல்வாய்ப் பல்லடியை நா ஓரமானது தடித்து நெருங்க லகாரமாகியும் , அண்ணம் (நா விளிம்பு) வீங்கி வருட ளகாரம் ஆய் - மேல்வாயை நா ஓரமானது தடித்துத் தடவ ளகாரமாகியும் , இரண்டும் முறை பிறக்கும் - இரண்டு எழுத்துக்களும் இம்முறையே பிறக்கும் .
|
|