எழுத்தியல்

பிறப்பு
முதல் எழுத்துக்களுக்கு முயற்சிப் பிறப்பு

 
86அண்ண நுனிநா நனியுறிற் றனவரும்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
அண்ணம் நா நுனி நனி உறின் - மேல்வாயை நாக்கு நுனி மிகப் பொருந்தின் , ற ன வரும் - றவ்வும் னவ்வும் பிறக்கும் .