எழுத்தியல்

8. இறுதிநிலை
மொழிக்கிறுதியில் வரும் எழுத்துக்கள்

 
107ஆவி ஞணநமன யரலவ ழளமெய்
சாயு முகரநா லாறு மீறே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஆவி-தனித்தும் மெய்யோடும் வரும் பன்னிரண்டு உயிர்களும் , ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள மெய்-பதினொரு மெய்களும் , சாயும் உகரம்- குற்றிய லுகரமுமாகிய , நாலாறும் ஈறு - இருபத்து நான்கு எழுத்தும் மொழிக்கு ஈறாகும் .

ஆ , ஈ , ஊ , ஏ , ஐ , ஓ எனவும் ,
விள , பலா , கரி , தீ , கடு , பூ , சேஎ , தே , தை , நொ , போ , கௌ
எனவும்,
உரிஞ் , மண் , பொருந் , மரம் , பொன் , வேய் , வேர் , வேல் , தெவ் , வீழ் , வாள் , அஃகு

எனவும் வரும்.