பதவியல்

இடைநிலை
நிகழ்காலவினை இடைநிலை

 
143ஆநின்று கின்று கிறுமூ விடத்தின்
ஐம்பா னிகழ்பொழு தறைவினை யிடைநிலை.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஆநின்று கின்று கிறு - ஆநின்று என்பதும் கின்று என்பதும் , கிறு என்பதும் , ஐம்பால் (மூவிடத்தின்) நிகழ்பொழுது அறை வினை இடைநிலை - ஐம்பால் மூவிடங்களிலும் நிகழ்காலத்தைக் காட்டும் வினைப் பகுபதங்களினுடைய இடைநிலைகளாகும் .

நடவாநின்றான், நடக்கின்றான், நடக்கிறான் என வரும் .

மற்றைப் பாலிடங்களிலும் ஒட்டிக்கொள்க.