|
| பொதுப்பாயிரம் நூலினது வரலாறு சூத்திர நிலை | | 19 | ஆற்றொழுக் கரிமா நோக்கந் தவளைப் பாய்த்துப் பருந்தின்வீழ் வன்னசூத் திரநிலை . | | ஆறுமுகநாவலர் காண்டிகையுரை | | சூத்திர நிலை - மேற்கூறிய சூத்திரங்கள் ஒன்றோடொன்று தொடர்ந்து நிற்கும் நிலைகள் , ஆற்றொழுக்கு - இடையறாது ஓடுகின்ற ஆற்று நீரோட்டத்தையும் , அரிமா நோக்கம் - முன்னும் பின்னும் பார்க்கின்ற சிங்கத்தினது பார்வையையும் , தவளைப் பாய்த்து - இடையிட்டுக் குதிக்கின்ற தவளையினது பாய்ச்சலையும் , பருந்தின் வீழ்வு - நெடுந் தூரத்தினின்றும் ஒன்றை வௌவிப் போதற்கு வீழ்கின்ற பருந்தினது வீழ்ச்சியையும் , அன்ன - போல்வனவாம் .
|
|