உருபு புணரியல்

உருபு புணர்ச்சிக்குச சிறப்புவிதி

 
248ஆமா கோனவ் வணையவும் பெறுமே .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஆ மா கோ - ஆ என்னும் பசுவின் பெயரும் மா என்னும் விலங்கின் பொதுப் பெயரும் கோ என்னும் இறைவனை உணர்த்தி நிற்கும் பெயரும் , னவ் அணையவும் பெறும் - உருபுகள் புணரும் இடத்து னகரச் சாரியை பொருந்தவும் பெறும் .

ஆனை , ஆவை , மானை , மாவை , கோனை , கோவை என விகற்பித்து வருதல் காண்க . மற்றை உருபுகளோடும் இப்படியே ஒட்டுக .

அணையவும் என்ற உம்மையால் , குவ்வுருபு , புணரும்போது , ஆனுக்கு , மானுக்கு , கோனுக்கு என உகரச் சாரியையும் உடன்பெறுதலும் .

ஆவுக்கு , மாவுக்கு , கோவுக்கு என உகரச் சாரியை ஒன்றே பெறுதலும் ,

ஆவினுக்கு , மாவினுக்கு , கோவினுக்கு , என இன் சாரியையும் உகரச் சாரியையும் உடன் பெறுதலும் ,

ஆவினை , மாவினை , கோவினை , என இன் உருபு ஒழிந்த உருபுகள் புணரும்போது இன் சாரியை பெறுதலும் கொள்க .

இனி , இரட்டுற மொழிதலால் , ஆமா என ஒரு சொல்லாய்க் காட்டுப் பசுவை உணர்த்தி நின்ற இடத்தும் ,

ஆமானை , ஆமானுக்கு , ஆமாவினுக்கு என இவ்விதிகள் பெறுதலும் , அணையும் என்று ஒழியாது பெறும் என்றமையால் . ஆன் , மான் , கோன் , ஆமான் எனத் தனி மொழிக்கண்ணும் னகரச் சாரியை வருதலும் கொள்க .