பெயரியல்

சொல்லின் பொது இலக்கணம்
ஐம்பால்

 
262ஆண்பெண் பலரென முப்பாற் றுயர்திணை .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஆண் பெண் பலர் என முப்பாற்று உயர்திணை - ஆண்பாலும் பெண்பாலும் பலர்பாலும் என்று மூன்று பாலினை உடைத்தாகும் உயர்திணை.

ஆடவர், ' காளையர் முதலிய ஆண்பன்மையையும், பெண்டிர், மங்கையர் முதலிய பெண்பன்மையையும், மக்கள் அவர் முதலிய அவ்விருவர் பன்மையையும் அடக்கிப் பலர்பால் என்றார் . பின் பலவின்பால் என்பதும் அது.