பெயரியல்

வேற்றுமை
எழுவாய் உருபு மற்றை உருபுகளை ஏற்றல்

 
293ஆற னுருபு மேற்குமவ் வுருபே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
அவ்வுருபே = பெயராய் நிற்கும் அவ்எழுவாய் உருபே, ஆறனுருபும் ஏற்கும் = ஐம்முதலாகிய ஆறு வேற்றுமை உருபுகளையும் ஏற்கும்.