வினையியல்

ஒழிபு
வினைக்குறிப்பு

 
347ஆக்க வினைக்குறிப் பாக்கமின் றியலா.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஆக்க வினைக்குறிப்பு = ஆக்கத்தால் வரும் வினைக்குறிப்புச் சொற்கள் , ஆக்கம் இன்று இயலா - விரிந்தாயினும் தொக்காயினும் வரும் ஆக்கச்சொல் இன்றி வாராவாம்.

சாத்தனல்லனாயினான், சாத்தனல்லன்; கல்வியாற் பெரியனாயினான், கல்வியாற் பெரியன்; கற்று வல்லனாயினான், கற்று வல்லன் என ஆக்கச் சொல் விரிந்தும் தொக்கும் வந்தன. எனவே, நல்லன் என்பது இயற்கைவினைக் குறிப்பாயின், விரிதல் தொகுத்தல் என்னும் இரண்டனுள் ஒருவாற்றானும் ஆக்கம் வேண்டாது, சாத்தனல்லன் என்றே வரும் என்பதாயிற்று.

28