ஆக்கியோன் பெயர் - நூல் செய்தோன் பெயரும் , வழி - நூல் வந்த வழியும் , எல்லை - நூல் வழங்கு நிலமும் , நூற் பெயர் - நூலினது பெயரும் , யாப்பு - இந் நூல் முடிந்த பின்பு இந்நூல் கேட்கத் தகும் என்னும் இயையும் , நுதலிய பொருள் - நூலிற் சொல்லப்பட்ட பொருளும் , கேட்போர் - இந்நூல் கேட்டற்கு உரிய அதிகாரிகள் இவர் என்பதும் , பயன் - கேட்டலால் பெறப்படும் பயனும் , ஆய் எண் பொருளும் - ஆகிய எட்டுப் பொருளையும் , வாய்ப்பக் காட்டல் - விளங்க உணர்த்துதல் , பாயிரத்து இயல்பு - சிறப்புப்பாயிரத்தினது இலக்கணமாம் . ஆகிய வென்பது ஆய் என்று ஆயிற்று .
|