|
சிறப்புப்பாயிரம் பாயிரம் நூலுக்கு இன்றி அமையாச் சிறப்பினது என்பது |
|
54 | ஆயிர முகத்தா னகன்ற தாயினும் பாயிர மில்லது பனுவ லன்றே. |
|
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை |
|
ஆயிரம் முகத்தான் அகன்றது ஆயினும் - ஆயிரம் உறுப்புக்களால் விரிந்தது ஆயினும் , பாயிரம் இல்லது பனுவல் அன்று - பாயிரம் இல்லாதது நூல் அன்றாம்.
|