எழுத்தியல்

பிறப்பு
சார்பு எழுத்துக்கு இடமுயற்சி

 
87ஆய்தக் கிடந்தலை யங்கா முயற்சி
சார்பெழுத் தேனவுந் தம்முத லனைய.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ஆய்தக்கு இடம் தலை முயற்சி அங்கா - ஆய்தம் பிறத்தற்கு இடந்தலை , தொழில் வாயைத் திறத்தலாம் , சார்பெழுத்து ஏனவும் தம் முதல் அனைய - ஆய்தம் ஒழிந்த மற்றைச் சார்பெழுத்துக்களும் இடப்பிறப்பு முயற்சிப் பிறப்புக்களினாலே தத்தம் முதல் எழுத்துக்களை ஒப்பனவாம்.