காலம் கரந்த பெயர் எச்சம் = காலம் பற்றிப் புடைபெயரும் வினை உருபாகிய தம் இறுதிகள் தொக்க பெயர் எச்சவினைகள் , வினைத்தொகை = வினைத்தொகைகளாம். காலம் என்றது ஆகுபெயர். காலம்பற்றிப் புடைபெயர் வினை உருபுகள் தொகும் எனவே, முதனிலை மாத்திரம் தொகாது இருக்கும் என்பது பெற்றாம். நேற்றுக் கொல் களிறு முன் விடு கணை | இறந்தகால வினைத் தொகை | இன்று கொல் களிறு, இப்பொழுது விடு கணை | நிகழ்கால வினைத் தொகை | நாளைக் கொல் களிறு, பின் விடு கணை | எதிர்கால வினைத் தொகை |
இவை, விரியும் இடத்துக், கொன்ற கொல்கின்ற, கொல்லும் எனவும், விட்ட, விடுகின்ற, விடும் எனவும் விரியும் எனக் கொள்க. கொல்களிறு விடுகணை என்றாற் போல்வன, முக்காலமும் பற்றி வரின் முக்கால வினைத்தொகை எனப்படும். வருபுனல், தருசுடர், நடந்திடுகுதிரை என வினைப் பகுதி விகாரப்பட்டும் வினைத்தொகை வரும். 13
|