செயும்பொருள் = செயற்கைப் பொருள் , காரணம் முதலா ஆக்கம் பொற்றும் = காரணச்சொல் முன்வர ஆக்கச்சொல் பின்வரப் பெற்றும் , காரணம் இன்றி ஆக்கம் பெற்றும் = காரணச்சொல் தொக்கு நிற்க ஆக்கச் சொல் வரப்பெற்றும் ஆக்கம் இன்றிக் காரணம் அடுத்தும் = ஆக்கச்சொல் தொக்கு நிற்கக் காரணச்சொல் வரப்பெற்றும் , இருமையும் இன்றியும் இயலும் = இவ் இருவகைச் சொல்லும் தொக்கு நிற்கவும் நடக்கும் . 1 . கடுவுங் கைபிழி யெண்ணெயும் பெற்றமையான் மயிர் நல்லவாயின ; எருப்பெய்து இளங்களைகட்டு நீர்கால் ஆத்தமையால் பயிர் நல்ல வாயின - இவை முன் காரணச்சொல்லும் பின் ஆக்கச்சொல்லும் வரப்பெற்றன . 2. மயிர் நல்லவாயின பயிர்நல்ல வாயின , இவை காரணச்சொல் தொக்கு நிற்க ஆக்கச்சொல் வரப்பெற்றன . 3 . கடுவும் கைபிழி எண்ணெயும் பெற்றமையான் மயிர் நல்ல ; எருப் பெய்து இளங்களை கட்டு நீர்கால் யாத்தமையால் பயிர் நல்ல ; இவை ஆக்கச்சொல் தொக்கு காரணச்சொல் வரப்பெற்றன . 4 . மயிர் நல்ல ; பயிர்நல்ல . இவை காரணச்சொல் ஆக்கச் சொல் இரண்டும் தொக்கு நிற்கப் பெற்றன . காரணமுதலா ஆக்கம் பெறுதல் ஒன்றும் வழுவாமல் காத்தலும் , ஒழிந்த மூன்றும் வழுவமைதியுமாம் என்க .
|