கீழின் முன் வன்மை - கீழ் என்னும் சொல்லின்முன் வரும் வல்லினம் , விகற்பமும் ஆகும் - ஒருகால் இயல்பு ஆகியும் ஒருகால் மிக்கும் வரும் விகற்பத்தையும் பொருந்தும் . கீழ்குலம் , கீழ்க்குலம் , கீழ்சாதி, கீழ்ச்சாதி என வரும். விகற்பமும் என்னும் இழிவுசிறப்பும்மையால் , இவற்றுள் இயல்பே சிறப்புடைத்து என்றறிக. 'வன்மை விகற்பமுமாகும்' என்றது " யரழ முன்னர் " என்னும் சூத்திரத்தால் (சூ.224) எய்தியது பெரும்பாலும் விலக்கல்.
|