எழுத்தியல்

இறுதிநிலை
சிலவற்றிற்குச் சிறப்பு விதி

 
108குற்றுயி ரளபி னீறா மெகர
மெய்யொடே லாதொந் நவ்வொ டாமௌக்
ககர வகரமோ டாகு மென்ப.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
குற்றுயிர் அளபின் ஈறு ஆம் - அ , இ , உ , எ , ஒ என்னும் குற்றுயிரின் அளபெடையிலே வரிவடிவில் அறிகுறியாகத் தனித்து ஈறாகும் , எகரம் மெய்யோடு ஏலாது - எகரம் மெய்யோடு ஈறாகாது , ஒ நவ்வொடு ஆம் - ஒகரம் நகர மெய் ஒன்றுடன் ஈறாகும் , ஒள ககர வகரமொடு ஆகும் - ஒளகாரங் ககர வகரங்களிரண்டு மெய்களுடன் ஈறாகும் , என்ப - என்று சொல்லுவர் புலவர்.

பலாஅ, தீஇ, பூஉ, சேஎ, கைஇ , கோஒ, கௌஉ
எனவும் ,

நொ எனவும்

கௌ, வௌ எனவும் வரும்.

நொ - துன்பப்படு , கௌ - வாயால் பற்று , வௌ - கொள்ளை யிடு ,