குறி யதன் கீழ் ஆக் குறுகலும்-குற்றெழுத்தின் கீழ் நின்ற ஆகாரம் அகரம் ஆதலும் , அதனோடு உகரம் ஏற்றலும் - அவ் அகரம் ஆதலுடனே உகரம் பெறுதலும் , இயல்பும் - அவ்விரண்டும் இன்றித் தன்னியல்பில் நிற்றலுமாகிய மூன்று விதியும் , ஆம் தூக்கின்-ஆகும் பாட்டின் இடத்து. நிலவிரி கானல்வாய் நின்று - நிலா - குறுகல் மருவினென் செய்யுமோ நிலவு - நிலா - குறுகலோடு உகரம் ஏற்றல் . நிலாவணங்கு வெண்மணல் மேனின்று - இயல்பு . செய்யுளில் இம் மூன்றுமாம் எனவே , வழக்கில் இரண்டும் ஒன்றுமாம் என்றார் ஆயிற்று . உதித்தது நிலவு , உதித்தது நிலா , கண்டேன் கனவு, கண்டேன் கனா எனக் குறுகுதலோடு உகரம் ஏற்றலும் தன்னியல்புமாகிய இரண்டும் வந்தன. தரா , மிடா எனத் தன்னியல்யு ஒன்றுமாய் நின்றன. 'ஆக் குறுகலும் அதனோடு உகரம் ஏற்றலுமாம்' என்றது எய்தாதன எய்துவித்தல் ; 'இயல்புமாம்' என்றது அவ்விடத்து வருவதோர் ஐயம் அறுத்தல்.
|