மெய்யீற்றுப் புணரியல்

ணகர னகர வீறு

 
210குறிலணை வில்லா ணனக்கள் வந்த
நகரந் திரிந்துழி நண்ணுங் கேடே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
குறில் அணைவு இல்லா ண னக்கள் - தனிக் குறில் ஒன்றையும் சாராது ஒருமொழி தொடர்மொழிகளைச் சார்ந்த ணகார னகார மெய்கள் , வந்த நகரம் திரிந்துழி - வருமொழிக்கு முதலாக வந்த நகரம் மயக்க விதி இல்லாமையினாலே திரிந்த இடத்து, கேடு நண்ணும் - கெடுதலைப் பொருந்தும்.

1.தூண் + நன்று = தூணன்று பசுமண்+நன்று = பசுமணன்று எனவும். +நன்மை எனவும் ணகரம் இரு வழியும் கெட்டது .

2. அரசன் + நல்லன் = அரசனல்லன் செம்பொன் + நன்று = செம்பொனன்று எனவும் , + நன்மை எனவும் னகரம் இரு வழியும் கெட்டது .

' ண , னக்கள் வந்த நகரந் திரிந்துழி நண்ணுங் கேடு ' என்றது மேலைச் சூத்திரத்தால் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் .