மெய்யீற்றுப் புணரியல்

ணகர னகர வீறு

 
216குயினூன் வேற்றுமைக் கண்ணு மியல்பே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
குயின் ஊன் - குயின் என்னும் பெயரும் ஊன் என்னும் பெயரும் , வேற்றுமைக் கண்ணும் இயல்பு- வேற்றுமையின் இடத்தும் இயல்பாகும் .

குயின் கடுமை , ஊன் கடுமை , சிறுமை , தீமை , பெருமை என வரும் [குயின் = மேகம் ]

'வேற்றுமைக் கண்ணு மியல்பு' என்றது ' ண ன வல்லினம் வரட்டறவும் ' "என எய்தியது விலக்கல்" .