மெய்யீற்றுப் புணரியல்

லகர ளகர வீறு

 
228குறில்வழி லளத்தவ் வணையி னாய்தம்
ஆகவும் பெறூஉ மல்வழி யானே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
குறில் வழி ல ள - தனிக் குறிலின் பின் நின்ற லகர ளகர மெய்கள்; அல்வழியான் த அணையின் - அல்வழிக் கண்ணே தகரம் வருமாயின் , ஆய்தம் ஆகவும் பெறூஉம் = றகர டகரங்களாகத் திரிதலே அன்றி ஆய்தமாகத் திரிதலையும் பொருந்தும்.

கல் + தீது = கஃறீது, முள் + தீது = முஃடீது என வரும்.
இது மேலைச் சூத்திரத்தால் எய்தியதன் மேல் சிறப்புவிதி.