குடுதுறு என்னும் குன்றியலுகரமோடு = குடுதுறு என்னும் குற்றியலுகர விகுதிகளும் , அல் அன் என்ஏன் ஆகும் - அல் , அன் , என் , ஏன் என்னும் நான்கு மெய் ஈற்று விகுதிகளும் ஆகிய , ஈற்ற = இவ் எட்டு விகுதிகளையும் இறுதியிலே உடைய மொழிகள் , இருதிணை முக்கூற்று ஒருமைத் தன்மை = இருதிணை இடத்தன ஆகிய ஒருவன் , ஒருத்தி , ஒன்று என்னும் மூன்று பால்களுக்கும் பொதுவாகிய ஒருமைத்தன்மை வினைமுற்றும் குறிப்பு முற்றுமாம். கு , டு , து , று என்னும் நான்கும் தாமே காலங்காட்டுதலால் குறிப்புவினைக்கு வாரா. அல் விகுதி எதிர் கால இடைநிலைகளோடு மாத்திரம் வரும்.
இ. தெரி. | எ.தெரி. | | ----------- | உண்கு | } யான். | உண்டு | ---------- | வந்து | வருது | சென்று | சேறு | -------- | உண்பல் |
இ.தெரி. | நி.தெரி. | எ.தெரி. | குறி. | | உண்டனன் | உண்ணாநின்றனன் | உண்பன் | தாரினன் | } யான். | உண்டனென் | உண்ணாநின்றனென் | உண்பென் | தாரினென் | உண்டேன் | உண்ணாநின்றேன் | உண்பேன் | தாரினேன் |
மற்றவைகளும் இப்படியே வரும். 12
|