கேட்குந போலவும் = கேளாதனவற்றைக் கேட்பன போலவும் , கிளக்குந போலவும் = பேசாதனவற்றைப் பேசுவன போலவும் , இயங்குந போலவும் = நடவாதனவற்றை நடப்பன போலவும் , இயற்றுந போலவும் = இத்தொழில்கள் அல்லன பிற செய்யாதனவற்றைச் செய்வன போலவும் , அஃறிணை மருங்கினும் அறையப்படும் = அஃறிணை இடத்தும் சொல்லப்படும். (வ-று) 1. "நன்னீரை வாழி அனிச்சமே" என்புழிக் கேளாதது கேட்பது போலச் சொல்லப் பட்டது. 2. "பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும்" என்புழிப் , பேசாதது பேசுவது போலச் சொல்லப்பட்டது. 3. "இவ்வழி அவ்வூர்க்குப் போகும்" என்புழி, நடவாதது நடப்பதுபோலச் சொல்லப்பட்டது. 4. "தன்னெஞ்சே தன்னைச் சுடும்" என்புழிச்,செய்யாதது செய்வது போலச் சொல்லப் பட்டது. 58
|