இடையியல்

கொல் இடைச்சொல்

 
435கொல்லே யைய மசைநிலைக் கூற்றே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
கொல் = கொல் என்பது , ஐயம் அசை நிலைக் கூற்று = ஐயப் பொருளையும் , அசைநிலைப் பொருளையும் தரும் இடைச்சொல்லாம்.

1. " இவ்வுருக் குற்றிகொல் மகன்கொல் " -இங்கே குற்றியோ மகனோ என்னும் பொருளைத் தருதலால் ஐயம்.

2. " கற்றதனா லாய பயனென்கொல் " - இங்கே வேறு பொருள் இன்றிச் சார்த்தப்பட்டு நிற்றலால் அசைநிலை.

16