சாவ என் மொழி ஈற்று உயிர் மெய் சாதலும் விதி-சாவ என்னும் செய என் எச்சவினைச் சொல்லினுடைய இறுதியில் உள்ள வகர உயிர்மெய் கெட்டுப் புணர்தலும் விதியாகும் . சாவ+குத்தினான் - சாக் குத்தினான் எனவரும் .இப்புணர்ச்சி சாவக் குத்தினான் என்னும் புணர்ச்சி போல் சிறந்தது அல்லாமையால் சாதலும் விதி என்றார் . இது நிலைமொழிக்கு எய்தாதது எய்துவித்தல்.
|