உரியியல்

ஒரு குணம் தழுவிய உரிச்சொல்

 
456சால வுறுதவ நனிகூர் கழிமிகல்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
சால....... - சால என்பது முதலாகிய இவ் ஆறு உரிச்சொற்களும் , மிகல் = மிகுதி ஆகிய ஒரு குணத்தை உணர்த்தும் உரிச்சொற்கள்.

சால -------- " பருவந்து சாலப் பலகொலென் றெண்ணி "

உறு -------- " உறுவளி துரக்கு முயர்சினை மாவின்."

தவ --------- " தவச்சேய் நாட்டா ராயினும்."

நனி -------- " வந்துநனி வருந்தினை வாழிய நெஞ்சே "

கூர் --------- " துனிகூ ரெவ்வமொடு"

கழி--------- "காமங் கழிகண் ணோட்டம்'.

சால என்பது சால் என்னும் உரிச்சொல் அடியாகப் பிறந்த வினை எச்சக் குறிப்பு.

15