|
| பொதுப்பாயிரம் நூலினது வரலாறு சூத்திரம் இன்னது என்பது | | 18 | சில்வகை யெழுத்திற் பல்வகைப் பொருளைச் செவ்வ னாடியிற் செறித்தினிது விளக்கித் திட்ப நுட்பஞ் சிறந்தன சூத்திரம் . | | ஆறுமுகநாவலர் காண்டிகையுரை | | ஆடியின் - பெரிய சரீர முதலியவைகளின் சாயையைத் தன்னுள்ளே செவ்வையாக அடக்கி இனிதாகக் காட்டும் சிறிய கண்ணாடி போல , சில வகை எழுத்தில் பல்வகைப் பொருளை - சிலவகை யெழுத்துக்களாலாகிய வாக்கியத்திலே பலவகைப்பட்ட பொருள்களை , செவ்வன் செறித்து இனிது விளக்கி - செவ்வையாக அடக்கி இனிதாகக் காட்டி , திட்பம் - குற்றம் இல்லாமையால் சொல்வலி பொருள்வலிகளும் , நுட்பம் - ஆழம் உடைமையால் பொருள் நுணுக்கங்களும் , சிறந்தன சூத்திரம் - சிறந்து வருவன சூத்திரங்களாம் .
|
|