வினையியல்

வினையெச்சம்
வினைமுதல் கொள்ளும் என்றவற்றிற்கு ஓர் புறனடை

 
345சினைவினை சினையொடு முதலொடுஞ் செறியும்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
சினைவினை = முதல் நான்கும் ஈற்றில் மூன்றும் என்ற வினைஎச்சங்கள் சினைவினையாயின் அவை, சினையொடும் = முன் வினைமுதல் கொள்ளும் என்ற விதியினாலே சினையுடனே அன்றி, முதலொடும் செறியும் - ஒற்றுமைப்பற்றி முதலுடனும் முடியும்.

காலொடிந்து விழுந்தான்,கண் வருவான் கதிரவனைத் தொழுதான் என வரும். பிறவும் அன்ன. ஒடிதல் சினைவினை, விழுதல் முதல் வினை.

26