மூலம்
எழுத்தியல்
மாத்திரைமாத்திரை இன்னதென்பது
100
இயல்பெழு மாந்த ரிமைநொடி மாத்திரை.
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
மாந்தர் இயல்பு எழும் இமை நொடி - மனிதருடைய இயல்பாக உண்டாகுகின்ற கண் இமைப்பொழுதும் கைந்நொடிப் பொழுதும் மாத்திரை - ஒரு மாத்திரை என்னும் வரையறைப் பொழுதாம்.
இவ் அளவுகருவியை முன்கூறாது பின்கூறியது பின்னது நிறுத்தல் என்னும் உத்தி.