பதவியல்

வடமொழியாக்கம்
ஆரிய்யொழி வடமொழியாதற்குச் சிறப்பு விதி

 
149இணைந்தியல் காலை யரலக் கிகரமும்
மவ்வக் குகரமு நகரக் ககரமும்
மிசைவரும் ரவ்வழி யுவ்வு மாம்பிற.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
இணைந்து இயல் காலை - ஆரிய மொழியுள் இரண்டெழுத்து இணைந்து ஓரெழுத்தைப்போல நடக்கும் போது , யரலக்கு இகரமும் - பின்னின்ற யகர ரகர லகரங்களுக்கு இகாரமும் , மவ் வக்கு உகரமும் - மகர வகரங்களுக்கு உகாரமும் , நகரக்கு அகரமும் - நகரத்திற்கு அகாரமும் , மிசை வரும் - மேலே வந்து வடமொழிகளாகும் , ரவ்வழி உவ்வும் ஆம் - இணைந்து முன்னின்ற ரகரத்திற்குப் பின் உகாரமும் வரும் .

தியாகம், வாக்கியம், கிரமம், வக்கிரம், கிலேசம், சுக்கிலம் எனவும்,

பதுமம், பக்குவம், எனவும்,

அரதனம் எனவும்,

அருத்தம் எனவும் வரும்.

பிற என்றதனால் சத்தி , கட்சி, காப்பியம், பருப்பதம் இவை முதலாகிய திரிபும் , தூலம், அத்தம், ஆதித்தன் இவை முதலாகிய கேடும் மற்றும் விகாரத்தால் வருவனவும் கொள்க.