உயிரீற்றுப் புணரியல்

குற்றுகர வீற்றுச் சிறப்புவிதி

 
198இரண்டு முன்வரிற் பத்தினீற் றுயிர்மெய்
கரந்திட வொற்றுனவ் வாகு மென்ப.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
இரண்டு முன் வரின்-இரண்டு என்பது முன் வருமாயின் , பத்தின் ஈற்று உயிர்மெய் கரந்திட - பத்தென்னும் நிலைமொழியானது ஈற்றிலுள்ள தகர உயிர்மெய் கெட , ஒற்று ஆகும் என்ப - தகர மெய் னகர மெய்யாகத் திரியும் என்று சொல்லுவர் புலவர்.

பன்னிரண்டு என வரும். இது உம்மைத்தொகை.