உயிரீற்றுப் புணரியல்

ஏகார ஓகார வீற்றுச் சிறப்புவிதி

 
201இடைச்சொல் லேயோ முன்வரி னியல்பே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
இடைசொல் ஏ (முன்) ஓ முன் - இடைச்சொல் லாகிய ஆறு ஏகாரத்தின் முன்னும் எட்டு ஓகாரத்தின் முன்னும் , வரின் இயல்பு - வல்லினம் வரின் பொதுவிதியால் மிகாது இயல்பாகும்.

1. அவனே கொண்டான் என்பது பிரிநிலையும் , வினாவும் , ஈற்றசையும் , தேற்றமுமாம். "ஏயே தனையென்றோரிருடி வினவ" என்பது இசை நிறை.

2. அவனோ கொண்டான் என்பது ஒழியிசை முதலிய எட்டுமாம்.

ஏ ஓ முன் வரின் இயல்பு என்றது "இயல்பினும் விதியினும்" என்னும் சூத்திரத்தால் எய்தியது விலக்கல்.