|
பெயரியல் வேற்றுமை விளிக்கப்படு பெயர்கள் |
|
304 | இ உ ஊவோ டையோ ன ள ர ல யவ்வீற் றுயர்திணை யோரவல் லிவற்றொடு ணஃகா னாவீ றாகும் பொதுப்பெயர் ஞநவொழி யனைத்தீற் றஃறிணை விளிப்பன . |
|
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை |
|
இஉஊவோடு ஐ ஓ ன ள ர ல ய ஈற்று உயர் திணைப் (பெயர்) = இகரமும் உகரமும் ஊகாரமும் ஐகாரமும் ஓகாரமும் என்னும் உயிர்களும் னளரலய என்னும் மெய்களும் ஆகிய பத்தெழுத்துக்களையும் இறுதியில் உடைய உயர்திணைப் பெயர்களும் ; ஓ , ர அல் இவற்றொடு ணஃகான் ஆ ஈறு ஆகும் பொதுப்பெயர் = இவற்றுள் ஓகார உயிரும் ரகரமெய்யுமாகிய இரண்டும் ஒழித்து நின்ற எட்டுடனே ணகரமும் ஆகாரமும் ஆகிய இரண்டும் கூடிய பத்தெழுத்துக்களும் இறுதியாகிய பொதுப்பெயர்களும் ; ஞ ந ஒழி அனைத்து ஈற்று அஃறிணைப் (பெயர் ) = ஞகர நகரங்களும் (ஈறாகாத எகரமும்) ஒழிந்த இருபத்தோர் எழுத்துக்களையும் ஈற்றில் உடைய அஃறிணைப்பெயர்களும் ; விளிப்பன = அழைக்கப்படுவன .
|