வினையியல்

முற்றுவினை
முன்னிலைப் பன்மை வினைமுற்று

 
337இர் ஈ ரீற்ற விரண்டு மிருதிணைப்
பன்மை முன்னிலை மின்னவற் றேவல்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
இர் ஈர் ஈற்ற இரண்டும் = இர் , ஈர் என்னும் இரண்டு விகுதிகளையும் இறுதியில் உடைய மொழிகள், இருதிணைப் பன்மை முன்னிலை = இருதிணைக்கும் பொதுவாகிய பன்மை முன்னிலை வினைமுற்றும் குறிப்புமுற்றுமாம், மின் அவற்று ஏவல் = மின்விகுதியை இறுதியிலுடைய மொழிகள் முன்னிலைப் பன்மை ஏவல் முற்றாம் .

மின் விகுதி அன்றி, ஈர் , உம் விகுதிகளும் முன்னிலைப்பன்மை ஏவலுக்கு வரும் எனக் கொள்க.
இ.தெரி.நி.தெரி.எ.தெரி.குறி.
உண்டனிர்உண்கின்றனிர்உண்பிர்குழையினிர்}நீர்
உண்டீர்உண்கின்றீர்உண்பீர்குழையீர்

உண்மின், உண்ணீர், உண்ணும் என ஏவல் வினைமுற்று வந்தன.

18