இரட்டைக்கிளவி = இரட்டைச் சொற்கள் , இரட்டின் பிரிந்து இசையா = இவ் இரட்டிப்பினின்றும் பிரிந்து தனித்து ஒலியாவாம் . எனவே , வலிந்து பிரித்துக் கூறிற் பொருள்படாது என்பதும் , இரட்டித்துக் கூறுதலே மரபு என்பதும் ஆயிற்று . "சல சல மும்மதம் பொழிய" , "கல கல = கூந்துணை அல்லால்" ," குறுகுறு நடந்து, " "வற்றியவோலை கலகலக்கும்;" "துடி துடித்துத் துள்ளிவரும் ; " என வரும் . துடிதுடித்து என்புழிப் , பின்னையது பிரிந்து இசைக்கும் ஆயினும் , முன்னையது பிரிந்து இசையாமையால் , இரட்டைச் சொல்லேயாம் என்க.
|