இனைத்து என்று அறி பொருள் = இவ அளவினது என்று வரையறை உணரப்படும் பொருளும் , உலகின் இலாப் பொருள் - எக்காலத்தும் எவ் இடத்தும் இல்லாத பொருளும் வினைப்படுத்து உரைப்பின் = வினைப்படுத்துச் சொல்லும் போது , உம்மை வேண்டும் - முற்றும்மையை வேண்டி நிற்கும் . 1 . தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார் ; இறைவற்குக் கண் மூன்று முச்சுடர் ; வேதம் நான்கும் உணர்ந்தான் என இனைத்து என்று அறி பொருள்கள் , வினைப்படுத்துச் சொல்லும் போது முற்றும்மை வேண்டி நின்றன . 2 . முயற்கோடு ஆகாயப்பூ என்றும் இல்லை ; ஒளி முன்இருள் எங்கும் இல்லை என உலகின் இலாப் பொருள்கள் , வினைப்படுத்துச் சொல்லும் போது முற்றும்மை வேண்டி நின்றன . 48
|