இயற்கைப் பொருளை = இயற்கைப் பொருள் செயற்கைப்பொருள் என இருவகைப்படும் பொருள்களுள் இயற்கைப் பொருளை , இற்று எனக் கிளத்தல் = இத்தன்மைத்து என்று சொல்லுக . இயற்கைப் பொருள் தனக்குப் பின்தோன்றாது தான்தோன்றும்போது உடன்தோன்றிய தன்மையை உடைய பொருள் .செயற்கைப் பொருள் தனக்கும் பின்தோன்றிய தன்மையை உடைய பொருள் [ இயற்கை = அவிகாரம் செயற்கை = விகாரம் . ] நிலம் வலிது ; நீர் தண்ணிது ; தீ வெய்து ; மயிர் கரிது ; பால் வெளிது ; பயிர் பசியது ; மெய் உள்ளது ; பொய் இல்லது எனவரும் . இயற்கைப் பொருளை இற்று என்னும் வினைக்குறிப்பாகிய செயற்படுத்துக் கூறுதலின் , இது வழுவமைதி ஆயிற்று .
|