பொதுவியல்

பொருள்கோள்
தாப்பிசைப் பொருள்கோள்

 
416இடைநிலை மொழியே யேனையீ ரிடத்தும்
நடந்து பொருளை நண்ணுத றாப்பிசை.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
இடை நிலை மொழி = இடையிலே நிற்கும் மொழி , ஏனை ஈரிடத்தும் நடந்து பொருளை நண்ணுதல் = ஒழிந்த முதலினும் ஈற்றினும் சென்று பொருளைக்கூடும் பொருள்கோள் , தாப்பிசை = தாப்பிசைப் பொருள்கோளாம்.

தாப்பிசை என்பதற்கு ஊசல்போல் இடைநின்று இருமருங்கும் செல்லும் சொல் என்பது பொருள். [ தாம்பு - ஊசல். இசை -சொல்.]

"உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண வண்ணாத்தல் செய்யா தளறு"
இதனுள், ஊன் என இடையிலே நின்ற மொழி ஊனுண்ணாமை உள்ளது என முதலிலும், ஊன் உண்ண எனப் பின்னரும் சென்றுகூடுதல் காண்க.