இன்னது இன்னுழி இன்னணம் இயலும் என்று இசை நூலுள் = பெயர், வினை இடை உரிகளில் இன்னசொல் ,தன்மை ,முன்னிலை, படர்க்கைகளிலும் வழக்குச் செய்யுள்களிலும் இவ் இடத்தே இவ் இலக்கணம் உடையதாய் நடக்கும் என்று சொல்லக் கடவதாகிய இந்நூலுள் , குண குணிப்பெயர்கள் சொல்லாம் பரத்தலின் = குணப்பெயர்களையும் குணிப்பெயர்களையும் வேண்டிய மட்டும் சொல்வதன்றி விரித்துச் சொல்லக்கடவம் அல்லம் ,விரிக்கின் மற்றொன்று விரித்தல் என்னும் குற்றம் வரும் ஆதலின் , நல்லோர் பிங்கலம் முதலா உரிச்சொலில் நயந்தனர் கொளல் - அவற்றைக் கண்டறிய வேண்டினோர் மற்றைப் புலவரால் கூறப்பட்ட பிங்கலந்தை , திவாகரம் முதலிய நூல்களில் உரிச்சொல் தொகுதியுள் விரும்பிக் கொள்க. எனவே, பெயரியலுள் பெயர்ச்சொல் தொகுதியையும் வினையியலுள் வினைச்சொல் தொகுதியையும் , இடையியலுள் இடைச்சொல் தொகுதியையும், விரிக்காமைக்கும் இதுவே புறனடையாம் என்பதாயிற்று. 19
|