எழுத்தியல்

பிறப்பு
முதல் எழுத்துக்களுக்கு முயற்சிப் பிறப்பு

 
77இ ஈ எ ஏ ஐ அங் காப்போ
டண்பன் முதனா விளிம்புற வருமே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
இ ஈ எ ஏ ஐ - இ , ஈ , எ , ஏ , ஐ ஐந்தும் , அங்காப்போடு - அங்காப்புடனே , அண்பல் நா முதல் விளிம்பு உற வரும் - மேல்வாய்ப் பல்லை நாக்கு அடியினது ஓரமானது பொருந்தப் பிறக்கும் .

அண்பல் - நா விளிம்பால் அணுகப்படும் பல் .