இருவர் நூற்கும் ஒரு சிறை தொடங்கி - முதனூல் வழிநூல் என்னும் இருவகை நூல்களுக்கும் பொருள் முடிபு ஒருபுடை ஒத்து , வேறு திரிபு உடையது புடைநூல் ஆகும் - மற்றவைகள் எல்லாம் ஒவ்வாமையை உடையது சார்பு நூலாம் . முதல் நூல் வழி நூல்களுக்குச் சிறுபான்மை ஒத்துப் பெரும்பாலும் வேறுபட்டிருப்பது சார்பு நூலாகும் . திரிபு வேறுடையதும் உற்று நோக்குவோருக்குப் பொருளால் ஒருங்கு ஒத்தே நிற்கும் .
|