சுட்டு = சுட்டும் , மறை = எதிர்மறுத்தலும் , நேர் = உடன்படலும் , ஏவல் = ஏவுதலும், வினாதல் = எதிர்வினாவுதலும் , உற்றது உரைத்தல் = உற்றதைச் சொல்லுதலும் , உறுவது கூறல் = உறுவதைச் சொல்லுதலும் , இனமொழி = இனத்தைச் சொல்லுதலும் , எனும் எண்ணிறையுள் - என்னும் இவ் எட்டு விடைகளுள் , இறுதி நிலவிய ஐந்தும் அப்பொருண்மையின் நேர்ப = ஈற்றில் விளங்கிய ஐந்தும் அவ்விடைப் பொருளைத் தருதலினாலே விடைகளாகவே தழுவிக் கொள்வார் புலவர். எனவே, முதன் மூன்றும் செவ்வன் இறையும், பின்னைய ஐந்தும் இறைபயப்பனவுமாம் என்பது ஆயிற்று. 1.தில்லைக்கு வழி யாது எனின், இது என்பது சுட்டு விடை. 2. சாத்தா இது செய்வாயா என்ற போது, செய்யேன் என்பது மறைவிடை 3. செய்வேன் என்பது நேர்விடை. 4. நீ செய் என்பது ஏவல் விடை. 5. செய்வேனோ என்பது வினாவிடை . 6. உடம்பு நொந்தது, நோவாநின்றது என்பன உற்றது உரைத்தல் விடை. 7. உடம்பு நோம் என்பது உறுவது கூறல் விடை. 8. மற்றையது செய்வேன் என்பது இனமொழிவிடை. 35
|