பொதுப்பாயிரம்

நூலினது வரலாறு
விருத்தி உரை இன்னது என்பது

 
23சூத்திரத் துட்பொரு ளன்றியு மாண்டைக்
கின்றி யமையா யாவையும் விளங்கத்
தன்னுரை யானும் பிறநூ லானும்
ஐய மகலவைங் காண்டிகை யுறுப்பொடு
மெய்யினை யெஞ்சா திசைப்பது விருத்தி.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
சூத்திரத்துள் பொருள் அன்றியும் - சூத்திரத்திலுள்ள பொருள் அல்லாமலும் , ஆண்டைக்கு இன்றி அமையா யாவையும் விளங்க - அவ் இடங்களுக்கு இல்லாமல் நிறையாத பொருள்கள் எல்லாம் விளங்கும்படி , தன் உரையானும் பிற நூலானும் - தானுரைக்கும் உரையாலும் ஆசிரிய வசனங்களாலும் , ஐங் காண்டிகை உறுப்பொடு - மேற்கூறிய காண்டிகை உறுப்பு ஐந்தினாலும் , ஐயம் அகல எஞ்சாது மெய்யினை இசைப்பது விருத்தி - சந்தேகம் தீரச் சுருங்காது மெய்ப்பொருளை விரித்து உரைப்பது விருத்தியுரையாம் .