செம்மை...நுண்மை-செம்மை முதல் நுண்மை ஈறாகச் சொல்லப்பட்ட பதினொன்றும் , இவற்று எதிர் - இவைகளுக்கு எதிரான வெண்மை முதலானவைகளும் , இன்னவும்-இவை போல்வன *பிறவும் , பண்பின் பகா நிலைப் பதம் - பண்புப் பொருளினின்றும் வேறு பொருள் பகுக்கப்படாத நிலையையுடைய பதங்களாம் . இவை எல்லாம் சொல் நிலையால் பகுபதமாயினும் மை விகுதிக்குப் பகுதிப் பொருளல்லது வேறு பொருள் இல்லாமையினாலே பொருள் நிலையால் பகாப்பதமாம் என்பது அறிவித்தற்குப் பண்பிற் பகா என்றும் , இவை மை விகுதியின்றி இயங்காமையினால் இவ் விகுதியையும் பகுதியாகவே நிறுத்தி மேல் வரும் விகுதியோடு புணர்க்கப்படும் என்பது அறிவித்தற்கு நிலைப்பதம் என்றும் கூறினார் . பண்புப் பகாப்பதமென்னாது பண்பிற் பகாநிலைப் பதம் என்றது சொற்பொருள் விரித்தல் என்னும் உத்தி , செம்மை , சிறுமை, சேய்மை , தீமை முதலிய வாய்பாடுகள் எடுத்துக்காட்டல் என்னும் உத்தி . *(அ.கு) அருமைXஎளிமை , இளமைXமுதுமை , குறுமைXநெடுமை , புலமைXமடமை கிழமைX வறுமை முதலியன .
|