செந்தமிழ் ஆகி - செந்தமிழ் நிலத்து மொழியாகி , திரியாது யார்க்கும் தம்பொருள் விளக்கும் தன்மைய இயற்சொல் = திரிசொல்போல் ஆகாது கற்றோருக்கும் கல்லாதோருக்கும் ஒப்பத் தம்பொருளை விளக்கும் தன்மையை உடைய உலகவழக்கே இயற்சொல்லாகும் . இயற்சொல் - இயல்பால் பொருள் உணரும் சொல். 1. மண், பொன் என்பன பெயர் இயற்சொல் . 2. நடந்தான் , வந்தான் என்பன வினை இயற்சொல். 3. அவனை, அவனால் என்பவற்றுள் , ஐ ஆல் என்பன இடை இயற்சொல் . 4. அழகு , அன்பு என்பன உரி இயற்சொல் . செந்தமிழ் நாடாவது பாண்டி வளநாடு ; தமிழ் முனிவராகிய அகத்தியருக்கும் தமிழை வளர்த்த பாண்டியர்களுக்கும் , சங்கப் புலவர்களுக்கும் உறைவிடம் அதுவாதலால் என்றறிக .
|