செய்கு என் ஒருமையும் = செய்கு என்னும் தன்மை ஒருமைமுற்றும், செய்கும் என் பன்மையும் = செய்கும் என்னும் தன்மைப் பன்மை முற்றும், வினையொடும் முடியினும் = பெயருடனே அன்றி வினையொடும் முடியினும், விளம்பிய முற்றே = முன் சொல்லப்பட்ட முற்றுக்களேயாம். உண்கு வந்தேன், உண்கும் வந்தேம் என வரும். 14
|