பொதுவியல்

வழாநிலை வழுவமைதி
மரபு வழுவமைதி

 
400செயப்படு பொருளைச் செய்தது போலத்
தொழிற்படக் கிளத்தலும் வழக்கினு ளுரித்தே .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
செயப்படுபொருளைச் செய்ததுபோல = செயப்படுபொருளைக் கருத்தாவைப்போல வைத்து , தொழிப்படக் கிளத்தலும் = அதன்மேல் அவ்வினைமுதல் வினை ஏற்றிக் கூறுதலும் , வழக்கினுள் உரித்து = வழக்கின் இடத்து உரித்தாம் .

இம்மாடு யான் கொண்டது , இச்சோறு யான் கொடுத்தது ; இவ்வெழுத்து யான் எழுதியது என வரும் .

கிளத்தலும் என்ற உம்மையினாலே , கருமத்தைக் கருத்தாவாகக் கூறுதலே அன்றிக் , கருவி நிலம் செயல் காலங்களைக் கருத்தாவாகக் கூறுதலும் அமையும் என்பது பெற்றாம் . அவை வருமாறு : - இவ் எழுத்தாணி யான் எழுதியது - கருவி ; இவ்வீடு யான் இருந்தது - நிலம் ; இத்தொழில் யான் செய்தது - செயல் ; இந்நாள் யான் பிறந்தது - காலம் என வரும்.

49