சொல் வினைக் குறை திரியினும் = முதலில் நான்கும் ஈற்றில் மூன்றும் என்ற வினை எச்ச வாய்பாடுகளாகப் பிறவினை எச்ச வாய்பாடுகள் வேறுபடினும் , பொருள் திரியா = அவற்றின் பொருள்கள் வேறுபடாவாம். 1. ஞாயிறு பட்டு வந்தான் என்புழிப் , பட என்னும் செய என் வாய்பாட்டு நிகழ்கால வினையெச்சம் பட்டு எனத் திரிந்து நின்றது. 2. மழை பெய்து நெல் விளைந்தது என்புழிப், பெய்ய என்னும் காரணப் பொருட்டாகிய செய என் வாய்பாட்டு இறந்தகால வினை எச்சம் பெய்து எனத் திரிந்து நின்றது. ஆ கிடந்து செறு விளைந்தது, பூணணிந்து விளங்கிய புகழ் சால் மார்ப , உண்டு பசி கெட்டது என்புழிக் கிடக்க, அணிய , உண்ண என்பன, முறையே, கிடந்து, அணிந்து, உண்டு எனத்திரிந்து நின்றன. 3. யான் கொள்வான், பொன் கொடுத்தான் என்புழிக், கொள என்னும் செய என் வாய்பாட்டு வினையெச்சம் கொள்வான் எனத் திரிந்து நின்றது. கோழி கூவிப் பொழுது புலர்ந்து என்புழிக் கூவ என்பது கூவி எனத் திரிந்தது அன்று, கூவுதல் புலர்தற்குக் காரணம் ஆகாமையாலும், செய என் எச்சம் காரணப் பொருண்மை உணர்த்தும் இடத்தல்லது இறந்த காலம் உணர்த்தாமையாலும் என்று உணர்க . கூவுவித்து என நிற்கற்பாலது கூவி என விவ்விகுதி தொக்கு நின்றது."குடிபொன்றிக் - குற்றமு மாங்கே தரும்."குடிமடிந்து குற்றம் பெருகும்." "இருணீங்கி யின்பம் பயக்கும்" என்புழிப், பொன்றுவித்து , மடிவித்து, நீங்குவித்து எனல் பாலன, பொன்றி, மடிந்து, நீங்கி என விவ் விகுதி தொக்கு நின்றன. 27
|